IPL 2025: 100 கோடி பார்வையாளர்கள், 84,000 கோடி நிமிடங்கள்... சாதனை படைத்த ஜியோ ஸ்டார்!
Vikatan June 20, 2025 10:48 AM

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் கொண்டாட்டமாக ரசித்து மகிழ்வது, வருடாந்திர வழக்கமாகியிருக்கிறது.

எல்லையில் பாகிஸ்தானுடன் மோதலையும் கடந்து வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது IPL 2025. இதனை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் தொலைகாட்சியிலும், ஆன்லைனிலும் பார்த்து ரசித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 1 பில்லியன் பார்வையாளர்களையும் 840 நிமிடங்கள் பார்வை நேரமும் கொண்டுள்ளது, இது இதுவரை இல்லாத எண்ணிக்கையாகும். (1 பில்லியன் = 100 கோடி)

RCB vs PBKS | IPL 2025 Finals

இது தொடர்பாக ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், "TATA IPL 2025 இறுதிப் போட்டி, ஜியோஸ்டார் தளங்களில் (ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோஹாட்ஸ்டார்) 31.7 பில்லியன் நிமிடங்கள் பார்வையிடப்பட்டு, T20 வரலாற்றிலேயே மிக அதிகமாக பார்க்கப்பட்ட போட்டியாக அமைந்தது." எனப் பெருமிதப்பட்டுள்ளனர்.

ஜியோஹாட்ஸ்டாரில் ஒட்டுமொத்த ஐபிஎல் பார்வைகள் (views) 23.1 பில்லியன் மற்றும் பார்வையிடப்பட்ட காலம் (watch time) 384.6 பில்லியன் நிமிடங்கள். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 29% அதிகரித்துள்ளது. இதற்கு பெரிய டி.வியில் கனக்ட் செய்து பார்க்கும் பழக்கம் அதிகரித்ததும் ஒரு காரணம் என்கின்றனர்.

அதிகமான மக்களை சென்றடையும் தொலைக்காட்சி வழியாக 456 பில்லியன் நிமிடங்கள் பார்வையிடப்பட்டுள்ளது.

இறுதிப்போட்டியை ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனல்கள் வழியாக 169 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். 15 பில்லியன் நிமிடங்கள் வாட்ச் டைம்.

Jio Hotstar

ஜியோ ஹாட்ஸ்டாரில், 892 மில்லியன் பார்வைகள், ஒரே நேரத்தில் 55 மில்லியன் பேர் வரைப் பார்த்திருக்கிறார்கள். 16.74 பில்லியன் நிமிடங்கள் பார்வையிடப்பட்டுள்ளது.

இப்படியாக இந்த சீசன் விராட் கோலி கோப்பையை வெற்றிபெற்றது, 14 வயது சிறுவன் அதிவேக 100 அடித்தது மட்டுமல்லாமல் மக்களை சென்றடைந்ததிலும் பல அபூர்வங்கள் நடந்துள்ளன.

இந்தியாவின் பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கமன்டரி மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளை உள்ளூர் மொழிகளில் வழங்கி, வெகுஜன மக்களை கவர்ந்தது இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

ஜியோஸ்டார் IPL ஐ 25+ ஃபீட்களுடன் (feed), 12 மொழிகளில், 170+ நிபுணர்களுடன், 4K, Dolby Atmos, VR360, தமிழ் மற்றும் இந்திய சைகை மொழி, மல்டிகாம் வீடியோ எனப் பல அம்சங்களுடன் வழங்கியதற்கு தக்க ரிட்டன்ஸ் கிடைத்திருக்கிறது என்கிறது ஜியோ ஹாட்ஸ்டார் .

"RCB குடும்பத்திற்கு மிகுந்த வலியும் வேதனையும்..." - நிவாரணம் அறிவித்த அணி நிர்வாகம்!
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.