“பயப்படாமல் தைரியமா வாமா…” ஹாஸ்பிடல் வர தயங்கிய கர்ப்பிணி… 4 மணி நேரம் பேசி சமாதானப்படுத்திய டாக்டர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!
SeithiSolai Tamil June 20, 2025 12:48 PM

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை பகுதியில் உள்ள ஹொசூர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா. தற்போது ஐந்து மாத கர்ப்பிணியான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் கணவருடன் வசிக்கும் போது கரு கலைந்து போன அனுபவம் காரணமாக, தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு செல்ல மறுத்து வந்தார்.

அந்த நிகழ்வின் காரணமாக அச்சத்தில் இருந்த மல்லிகா, இந்த பிரசவத்திற்கும் எந்தவித மருத்துவ பரிசோதனைக்கும் வர மறுத்துவந்தார். இதனால், மல்லிகாவை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல பரிசோதனை பணியாளர்கள் 12 முறை மலைக் கிராமத்திற்கு சென்று கடுமையாக முயற்சி செய்தனர். ஆனாலும், அவர் எதற்கும் சம்மதிக்காமல், போக்குக் காட்டியுள்ளார்.

“>

 

இந்நிலையில், வட்டார மருத்துவ அலுவலராக பணியாற்றும் டாக்டர் சக்தி கிருஷ்ணன், மல்லிகாவின் நிலைமையை உணர்ந்து, ஓந்தனை மலை கிராமத்திற்கு சென்று, மல்லிகாவுடன் தரையில் அமர்ந்து நேரில் பேசினார். அவரது உணர்வுகளைப் புரிந்து கொண்டு, பயங்களை அகற்றி, நம்பிக்கையை ஏற்படுத்தி, மென்மையான அணுகுமுறையில் சுமார் 4 மணி நேரம் விளக்கமளித்தார்.

இதனால் மனம் உருகிய மல்லிகா, மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைப்புத் தருவதற்கு சம்மதம் தெரிவித்தார். இதற்காக மருத்துவ துறையின் பொறுப்புணர்வும், மனித நேய அணுகுமுறையும் பாராட்டுக்குரியவையாக இருக்கின்றன.

மருத்துவ பணியாளர்களின் தொடர்ந்து செய்யப்பட்ட உணர்வுள்ள முயற்சியினால், கிராமங்களில் காணப்படும் மருத்துவ விழிப்புணர்வு குறைபாடுகளுக்கு ஒரு நம்பிக்கையான மாற்றம் தோன்றும் என பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.