சென்னையில் கடந்த 2 நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 வரையில் குறைந்து ஒரு சவரன் 73680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 9210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 10047 ரூபாய்க்கும், ஒரு சவரன் 80,376 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு 2 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 120000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.