ஜார்க்கண்டின் நிம்தி பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, பொலிரோ ஜீப்பில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது, நம்சோல் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், வேகமாக வந்த டிரக் மீது பொலிரோ மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஜீப்பில் பயணித்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து பற்றி விசாரித்து வருகின்றனர்.