இந்தியாவில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் அவமானமாக உணர்வார்கள். நம்முடைய மொழிகள், நம்முடைய கலாசாரத்தின் ரத்தினங்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் அவர் பேசியதாவது: "இந்தியாவில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் அவமானமாக உணர்வார்கள். அத்தகைய சமூகம் உருவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. நம்முடைய நாட்டின் மொழிகள், நம்முடைய கலாசாரத்தின் ரத்தினங்கள் என்று நான் நம்புகிறேன்.
நம்முடைய மொழிகளில் இல்லையென்றால், நாம் உண்மையான இந்தியனாக இல்லாமல் போய்விடுவோம். நமது நாட்டையும், நமது கலாச்சாரத்தையும், நமது வரலாற்றையும், நமது மதத்தையும் புரிந்து கொள்ள, எந்த அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது. அரைகுறையான வெளிநாட்டு மொழிகள் மூலம் முழுமையான இந்தியா என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாது." என்றார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது