3-ஆம் வகுப்பு மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியர்…. அடுத்த நொடியே சுருண்டு விழுந்து…. ஓடோடி வந்த பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்…!!
SeithiSolai Tamil June 21, 2025 11:48 PM

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியகண்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முரளி என்பவரது மகன் ரியாஸ் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்க்கும் அன்பரசன் என்பவர் சரியாக படிக்கவில்லை எனக்கூறி பிரம்பால் ரியாசின் முதுகில் பலமாக அடித்துள்ளார்.

இதனால் உடனே சுருண்டு விழுந்து ரியாசுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஆசிரியர்கள் ரியாசை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தகவலறிந்த பெற்றோரும் பள்ளிக்கு விரைந்து வந்து ஆசிரியரை பணிநீக்கம் செய்யுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை சமாதானப்படுத்தி விசாரணை நடத்துவதாக உறுதியளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.