வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணிபுரிந்து தொலைக்காட்சி தொடரில் பணியாற்றி அதற்குப் பிறகு சினிமாவிற்குள் நுழைந்தார் வெற்றிமாறன். 2007 ஆம் ஆண்டு பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் வெற்றிமாறன். முதல் படமே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
அடுத்ததாக 2011 ஆம் ஆண்டு மீண்டும் தனுஷுடன் இணைந்து ஆடுகளம் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் தேசிய திரைப்பட விருதுகளை வென்று வெற்றி பெற்றது. அடுத்ததாக விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை பாகம் ஒன்று இரண்டு போன்ற வெற்றி பழங்களை இயக்கியுள்ளார் வெற்றிமாறன். இவரது படங்கள் பெரும்பாலும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்று இருக்கும்.
இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார் வெற்றிமாறன். தற்போது கவின் நடிக்கும் மாஸ்க் திரைப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்கிறார். அது சம்பந்தமான ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அது என்னவென்றால் கவின் நடிக்கும் மாஸ்க் திரைப்படத்தை ஒரு புதுமுக இயக்குனர் தான் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் சில காட்சிகளில் வெற்றிமாறன் அவர்களுக்கு அதிருப்தி இருந்திருக்கிறது. அதனால் அப்படத்தின் தயாரிப்பாளரான வெற்றிமாறன் களத்தில் இறங்கி சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று ஒரு சில காட்சிகளை அவரே ஆல்டர் செய்து இயக்குவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.