RJ பாலாஜியில் இருந்து RJB என பெயரை மாற்றியதற்கு காரணம் இதுதான்… RJB கொடுத்த விளக்கம்…
Tamil Minutes June 22, 2025 09:48 PM

RJ பாலாஜி தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர் நடிகர் மற்றும் வானொலி தொகுப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கி ஆகவும் கிரிக்கெட்டை கமென்ட் செய்பவராகவும் பிரபலமாக இருந்தார் RJ பாலாஜி. பிறகு தீயா வேலை செய்யணும் குமாறு என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து ஹீரோக்களுக்கு நண்பன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரம் என பல திரைப்படங்களில் தோன்றியிருந்தார் RJ பாலாஜி. LKG திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். 2020 ஆம் ஆண்டு மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

அடுத்து 2021 ஆம் ஆண்டு வீட்ல விசேஷம் என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கி நடித்து புகழ்பெற்றார் RJ பாலாஜி. இவரது படங்களில் ஆழமான கருத்துக்கள் இருக்கும். அதனால் நம்பிக்கைக்குரிய இயக்குனர் என்ற பெயர் பெற்றார். தற்போது சூரியா 45 திரைப்படத்தை இயக்கி வருகிறார் RJ பாலாஜி.

இந்நிலையில் சூர்யாவை வைத்து RJ பாலாஜி இயக்கும் படத்திற்கு கருப்பு என்று பெயரிட்டு இருப்பதாக பட குழு வெளியிட்டது. அதில் இயக்குனர் பெயர் என்ற இடத்தில் RJ பாலாஜிக்கு பதிலாக RJB என்று போட்டிருந்தது. இது சம்பந்தமான ஒரு விளக்கத்தை முன்னமே ஒரு நேர்காணலில் RJ பாலாஜி கூறி இருப்பார். அவர் கூறியது என்னவென்றால், ஊர்வசி மேம் எனக்கு ரொம்ப குளோஸ் அவங்க கூட படம் பண்ணும் போது என் பெயரை RJ பாலாஜிக்கு பதிலாக RJB என்று உன் பெயரை டைட்டிலில் போடு அப்படி போட்டால் நல்லா இருக்கும் நீ முன்னுக்கு வந்துருவ என்று நியூமராலஜி மாதிரி எல்லாம் பார்த்து பேசுனாங்க. ஆனா எனக்கு கொஞ்சம் கூச்சமா இருந்தது அப்படி போட்டா மக்கள் ஏத்துப்பாங்களான்னு யோசனை இருந்தது. சரி அடுத்து வர படத்துல முயற்சி பண்ணலாம் அப்படின்னு இருக்கேன் என்று கூறியிருக்கிறார் RJ பாலாஜி. அதன்படி தனது பெயரை தற்போது RJB என்று சூர்யா 45 பட டைட்டில் ரிலீஸ் போஸ்டரில் போட்டிருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.