முருகனின் தந்தை சிவபெருமான் முதல் சங்கத்துக்கு தலைமை வகித்தது மதுரையில்தான். எனவே, இந்த நகரில் தந்தை, தாய் மற்றும் மகன் — மூவரும் இருக்கிறார்கள் என ஆந்திராவின் துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் கூறினார்.
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் உரையாற்றினார்: "முதல் புரட்சித் தலைவன் முருகன்"மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் ஆந்திராவின் துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் பங்கேற்றார். வேட்டி, வெள்ளை சட்டை மற்றும் பச்சை துண்டுடன் பங்கேற்ற அவர், மாநாட்டில் உரையாற்றினார்.
அப்போது பவன் கல்யாண் தனது உரையில் கூறியது:"என்னை மதுரைக்கு அழைத்தது முருகன் தான். உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகப்பெருமான். கடைசி அறுபடைவீடு மதுரையில்தான் உள்ளது.
மதுரை என்பது மீனாட்சியின் பட்டணம். மீனாட்சி அம்மன், பார்வதியின் அம்சம். முருகனின் தந்தை சிவபெருமான் முதல் சங்கத்துக்கு தலைமை வகித்தது மதுரையில்தான். எனவே, இந்த நகரில் தந்தை, தாய் மற்றும் மகன் — மூவரும் இருக்கிறார்கள்.
இதுவே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்றவரின் பிறப்பிற்கு காரணமான புண்ணியமாய் இருக்கலாம். அவர் முருகனின் அவதாரமாகவே கருதப்படுகிறார்.14ஆம் நூற்றாண்டில் மீனாட்சி அம்மன் கோவில் மூடப்பட்டிருந்தது மதுரையின் இருண்ட காலமாகும்.
அறம் என்பது அனைவரையும் சமமாகப் பார்ப்பது. இந்துமதத்தை சீண்ட வேண்டாம். சாதுமிரண்டால் காடு கொள்ளாது. முருகனை கௌரவிக்காமல், நம்பிக்கையை கேலி செய்யும் சிலரிடம் நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உங்கள் நம்பிக்கையை நாங்கள் கேள்விக்குள் வைக்கவில்லை; எங்களது நம்பிக்கையை நாங்கள் காத்துக் கொள்ள வேண்டியது அவசியம்."இந்த உரை மதுரை மாநாட்டில் பங்கேற்ற முருக பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றது. பவன் கல்யாணின் இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களிலும் விரிவாக பகிரப்பட்டு வருகின்றன.