ஹிமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற குலு-மனாலி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், ஆழமான பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தார். இச்சம்பவம் அருகில் இருந்த நபரின் கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், கார் மிக வேகமாக சாலையில் சென்று, பின்னர் சாலையை விட்டு விலகி பள்ளத்தில் விழும் காட்சி தெரிகிறது.
ஓட்டுநர் காரில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினார். இதனை நேரில் பார்த்தவர்கள் ஓட்டுநர் விபத்தை உணர்ந்தவுடன் உடனடியாக கதவைத் திறந்து வெளியே குதித்துவிட்டார். அதன்பிறகு கார் பள்ளத்தில் சென்று முற்றிலும் சேதமானது. ஓட்டுநருக்கு சின்ன காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், அதிவேகம் மற்றும் வழுக்கும் சாலை இவ்விபத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் ஓட்டுநரின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீட்புக்குழுக்கள் வரவழைக்கப்பட்டு, பள்ளத்தில் விழுந்த காரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது