முரளியை AI தொழில்நுட்பத்தில் கொண்டு வருவீர்களா?... அதர்வா கொடுத்த பதில்!
Newstm Tamil June 24, 2025 10:48 AM
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது டி என் ஏ படத்தின் மூலம் ஒரு வணிக-விமர்சன வெற்றியைப் பெற்றுள்ளார் அதர்வா. இந்த படத்தில் அவருடன் நிமிஷா சஜயன் நடிக்க நெல்சன் வெங்கடேசன் இயக்கினார். ஒலிம்பியா பிக்சர்ஸ் அம்பேத்குமார் தயாரித்திருந்தார்.
இந்த படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக மதுரை வந்த அதர்வாவிடம் “விஜயகாந்த் போல முரளியையும் ஏ ஐ தொழில்நுட்பத்தில் கொண்டு வருவீர்களா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “அதற்கான திரைக்கதை வேண்டும். இப்போதைக்கு அது மாதிரி எந்த திட்டமும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வருமா வராதா என்று தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.