நெல்லையில் காவலரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் இளஞ்சிறார் உட்பட 5பேரை போலீசார் கைது செய்துள்னர்.
நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதான வளாகத்தில் மாநகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. வார விடுமுறை தினமான நேற்று இங்கு ஏராளமானவர்கள் குடும்பத்துடன் சென்றதால் கூட்டம் அலைமோதியது. இரவு 9 மணி அளவில் பூங்காவில் நின்ற சில இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கு குடும்பத்தினருடன் வந்த போலீஸ்காரரான மணிமுத்தாறு 9-வது பட்டாலியனைச் சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா (29) இளைஞர்களை தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், போலீஸ்காரர் முகமது ரஹ்மத்துல்லவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார், பூங்காவுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே போலீஸ்காரர் முகமது ரஹ்மத்துல்லாவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இளஞ்சிறார் உட்பட 5பேரை போலீசார் கைது செய்துள்ளனர. நெல்லையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது