தங்கம் விலை இரண்டு தினங்களாக சற்று குறைந்துள்ளது. நேற்று (ஜூன் 23) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,840க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.9,230க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜூன் 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,240க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.75 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,155க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிந்துள்ளது.