இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றநிலை மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜூன் 23ம் தேதி அறிவித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. ஜூன் 24 ம் தேதி அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், தெஹ்ரானில் உள்ள ஈரானின் ஆட்சி மற்றும் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து தீவிர வான்வழி தாக்குதல்களை நடத்த இஸ்ரேல் பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆனால், ஈரான் இந்த குற்றச்சாட்டை மறுத்து, “நாங்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறவில்லை, இஸ்ரேலின் குற்றச்சாட்டு தவறானது,” எனக் கூறியுள்ளது. ஈரானின் வெளியுறவு அமைச்சர் “இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை சாத்தியமாகும். நாங்கள் எந்த ஒப்பந்தத்தையும் மீறவில்லை,” எனக் கூறியுள்ளார்.
இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, ஈரான் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் பதிலடி தவிர்க்க முடியாது என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் இந்த மறுப்பு, மோதலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி, “ஈரான் எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
ஈரானின் புரட்சிகர காவல்படை தளபதி “இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக எங்கள் பதிலடி தொடரும். இது திட்டமிடப்பட்ட, பல அடுக்கு தாக்குதலாக இருக்கும்,” என அறிவித்துள்ளார் . இந்த எச்சரிக்கைகள், ஈரான் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு அஞ்சவில்லை என்பதை உறுதி செய்கின்றன. இந்த மோதல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது