`பிள்ளைகள் எந்த மதத்தை தேர்வு செய்வார்கள்' - US துணை அதிபரின் மனைவி உஷா வான்ஸின் பதிலென்ன?
Vikatan June 27, 2025 03:48 PM

அமெரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றார். மேலும், அவரின் குடியரசு கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட ஜே.டி. வான்ஸும் வெற்றிபெற்றார்.

இவரின் மனைவி உஷா சிலுக்குரி வான்ஸ் ஓர் இந்திய வம்சாவளி. இந்தத் தம்பதிக்கு, இவான், விவேக், மிராபெல் என மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.

அதிபர் தேர்தலுக்கு முன்பு உஷா ஒருமுறை, "என் பெற்றோர்கள் இந்துக்கள். எங்களை நல்ல பெற்றோராகவும் நல்ல மனிதர்களாகவும் மாற்றியதில் இதுவும் ஒன்று." எனக் கூறியிருந்தார்.

ஜே.டி. வான்ஸ் - உஷா சிலுக்குரி வான்ஸ் இந்தியா வந்தபோது

இந்த நிலையில், தனது பிள்ளைகள் வளரும்போது கத்தோலிக்கர்களாக ஞானஸ்நானம் பெற வேண்டுமா என்பது குறித்து உஷா பேசியிருக்கிறார்.

சிட்டிசன் மெக்கெய்ன் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய உஷா, "அதை அவர்களே தேர்வு செய்யலாம்.

அவர்களைக் கத்தோலிக்க பள்ளிக்கு நாங்கள் அனுப்புகிறோம். அவர்கள் ஒவ்வொருவருக்கும் சாய்ஸ் கொடுத்திருக்கிறோம்.

அது அவர்களின் விருப்பம்

கத்தோலிக்கராக ஞானஸ்நானம் பெற விரும்புகிறார்களா என்பதை அவர்களே தேர்வு செய்துகொள்ளலாம்.

பின்னர், பள்ளியில் தங்கள் வகுப்புகளுடன் படிப்படியான செயல்முறையையும் கடந்து செல்லலாம்.

நான் ஜே.டி. வான்ஸை சந்தித்தபோது, அவர் கத்தோலிக்கராக இல்லை. எங்களுக்கு முதல் குழந்தை பிறந்தபோது அவர் மதம் மாறினார்.

அவர் மதம் மாறியபோது, அதைப் பற்றி நாங்கள் நிறைய உரையாடினோம்.

ஜே.டி. வான்ஸ் - உஷா சிலுக்குரி வான்ஸ்

ஏனெனில், கத்தோலிக்கராக மாறும்போது, குழந்தைகளைக் கட்டுப்பாடுகளுடன் வளர்ப்பது போன்ற பல முக்கியமான கடமைகள் அதில் வருகிறது.

இப்போதும், நான் கத்தோலிக்க பெண் அல்ல என்பது என் குழந்தைகளுக்குத் தெரியும்.

எனவே, நாங்கள் அவர்களுக்குக் கொடுக்கும் புத்தகங்கள், காட்டும் விஷயங்கள், சமீபத்திய இந்தியா பயணம், அந்தப் பயணத்தின் சில மதக் கூறுகள் மூலம் இந்து பாரம்பரியத்தை அவர்கள் நிறைய அணுகலாம். அது அவர்களின் விருப்பம்" என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY JD Vance: அமெரிக்காவின் துணை அதிபராகிறார் இந்திய வம்சாவளி பெண்ணின் கணவர்; யார் இந்த Usha Chilukuri?
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.