ராம் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபல இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் தங்கர்பச்சான் அவர்களுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதுமட்டுமல்லாமல் ராஜ்குமார் சந்தோஷி கோவிந்த் நிகிலானி போன்ற இந்தி திரைப்பட இயக்குனர்களிடமும் பணிபுரிந்து உள்ளார் இயக்குனர் ராம். 2007 ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் ராம்.
இவர் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. ஆனால் வணிக ரீதியாக அது வெற்றி பெறவில்லை. ஆனால் அப்படத்தில் நடித்த ஜீவாவும் அஞ்சலியும் தங்களது நடிப்பிற்காக பெரிதும் பாராட்டப்பட்டு அவர்களது கேரியரில் முக்கியமான ஒரு திருப்புமுனையை பெற்றார்கள். அதற்கு அடுத்ததாக இவர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் இவர் இயக்கிய தங்க மீன்கள் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு மத்திய அரசு விருதுகளை வழங்கி இருக்கிறது.
அதற்கு அடுத்தபடியாக 2017 ஆம் ஆண்டு தரமணி 2019 ஆம் ஆண்டு பேரன்பு ஆகிய திரைப்படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார் ராம். இந்நிலையில் விகடன் நேர்காணலில் கலந்து கொண்ட இயக்குனர் ராம் தனது சினிமா அனுபவங்களை பற்றி பகிர்ந்திருக்கிறார். அதில் நடிகை அஞ்சலியை பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.
அவர் கூறியது என்னவென்றால், என்னுடைய கற்றது தமிழ் திரைப்படத்தில்தான் அஞ்சலி முதல் முறையாக நடித்தார். அதன் நற்பயனால் நான் எந்த படத்திற்கு கூப்பிட்டாலும் மறுப்பேதும் சொல்லாமல் வந்து நடித்துக் கொடுப்பார் அஞ்சலி. அவரை எங்கள் வீட்டு பெண்ணாக தான் பார்க்கிறேன். நாங்கள் அவரை ஆனந்தி என்று தான் கூப்பிடுவோம். அதுமட்டுமில்லாமல் எந்த கதாபாத்திரம் என்றாலும் அதற்கு தகுந்தார் போல் தன்னை மாற்றிக்கொண்டு திறமையாக நடிக்க கூடியவர் அஞ்சலி என்று புகழ்ந்து பேசி இருக்கிறார் இயக்குனர் ராம்.