அஜித் - மகிழ்திருமேனி மீண்டுமா? தடையறத்தாக்க ரீ ரிலீஸில் மகிழ்திருமேனி கொடுத்த ஷாக்
CineReporters Tamil June 28, 2025 07:48 AM

கடந்த வருடம் பிப்ரவரி 6ஆம் தேதி அஜித் திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்கினார். லைக்கா நிறுவனம் படத்தை தயாரித்து இருந்தது. துணிவு திரைப்படத்தை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் தான் விடாமுயற்சி. படத்தைப் பொறுத்த வரைக்கும் அஜித் திரிஷா கெமிஸ்ட்ரி ரசிக்கும்படியாக இருந்தது.

அதில் அமைந்த சவதிகா பாடல் செம வைரலானது. அர்ஜுன் ரெஜினா இவர்களுடைய நடிப்பு அசாத்தியமாக அமைந்தது. அனிருத் இசை படத்தை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றது .ஆனால் கதை என்று பார்க்கும் போது ரசிகர்களுக்கு அது திருப்தியாக இல்லை. அதனால் மகிழ் திருமேனியை அஜித் ரசிகர்கள் உள்பட மற்ற ரசிகர்களும் வச்சு செய்தனர் என்று தான் சொல்ல வேண்டும் .

ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் படத்தை பார்த்து நல்ல கன்டென்ட் உள்ள திரைப்படம் விடா முயற்சி, இதுவரை அஜித் கேரியரில் அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரமாக இது அமைந்தது, எந்த ஒரு மாஸ் காட்சியும் இல்லை ,ஆக்சன் சொல்லும்படியாக இல்லை, அஜித்துக்கு உண்டான ஓபனிங் இந்த படத்தில் கிடையாது, சாதாரணமாக ஒரு மனிதன் தன் மனைவியை தொலைத்து விட்டு எந்த மனநிலையில் இருப்பானோ அதை அப்படியே படம்பிடித்து காட்டி இருக்கிறார் மகிழ் என படத்தை பார்த்த ஒரு சில பேர் கூறி வந்தார்கள் ,

ஆனாலும் இந்த படத்திற்கு பிறகு மகிழ்திருமேனியை ரசிகர்கள் ஒரு பாடு படுத்திவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். அஜித்தை பொருத்தவரைக்கும் ஒரு படத்திற்கு கால் ஷீட் கொடுத்து விட்டால் வரிசையாக தொடர்ந்து மூன்று படங்களில் அதே இயக்குனருக்கு கால் சீட் கொடுப்பார். அந்த வகையில் மகிழ்திருமேனியுடன் மீண்டும் அஜித் இணைந்து விடுவாரோ என்ற ஒரு பயமும் ரசிகர்களுக்கு இருந்தது.

Magizh

நல்ல வேளையாக குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன்தான் படத்தில் இணைய போகிறார். இந்த நிலையில் இன்று அருண் விஜய் மகிழ்திருமேனி காம்போவில் உருவான மெகா ஹிட் திரைப்படம் தடையற தாக்க படத்தை ரோகிணி திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்தனர். அந்த படத்தை ரசிகர்களுடன் பார்க்க மகிழ் திருமேனியும் அருண் விஜய்யும் வந்தனர். அப்போது அஜித்துடன் மீண்டும் இணைவீர்களா? அவர் ஒரு இயக்குனருக்கு தொடர்ந்து மூன்று படங்களில் கால்ஷீட் கொடுப்பார். அதனால் அந்த லிஸ்டில் நீங்களும் இருக்கிறீர்களா என்ற ஒரு கேள்வியை நிருபர் கேட்க அதற்கு மகிழ்திருமேனி நம்புவோம் என ஒரே வார்த்தையில் பதிலை சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.