பொதுவாக நெருஞ்சில் செடியை கொண்டு பல நோய்களை குணப்படுத்தலாம் .இந்த நெருஞ்சில் கொண்டு எந்தெந்த நோய் வராமல் தடுக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.நெருஞ்சில் செடியின் தண்டு,இலை,வேர் ,பூ,காய்,மற்றும் முள் அனைத்துமே நம் உடலுக்கு மருந்தாக பயன்படுகிறது.இதன் மூலம் பல நோய்கள் வராமல் தடுக்கலாம்
2.சிலருக்கு கிட்னியில் கல் இருக்கும் .நெருஞ்சில் சிறுநீரக கல்,நீரடைப்பு, வெள்ளை நோய்,நீர் எரிச்சல்,வண புள்ளி,மேகம் போன்ற நோய்களுக்கு அருமருந்தாக காணப்படுகிறது.
3. சிலருக்கு குழந்தை இல்லாமல் இருக்கும் .நெருஞ்சில் மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல் போன்ற வேலைகளை செய்யும்.
4.சிலரை உஷ்ண நோய்கள் பாடாய் படுத்தும் .அவர்கள் ஒரு பிடி அருகம்புல்லுடன், இரண்டு நெருஞ்சில் செடியை வேருடன் பிடிங்கி சுண்டக் காய்ச்சி வெறும் வயிற்றில் குடித்தால் உடல் வெப்பம் தணியும்
5.இந்த நெருஞ்சில் காய்ச்சிய நீரினை குடித்தால் நீர் வடிதல், சிறுநீர் சொட்டாக வருதல் , கண் எரிச்சல், போன்றவை குணமாகும்.