அரச முறை பயணம்: 08 நாட்களில் 05 நாடுகளுக்கு செல்லவுள்ள பிரதமர் மோடி..!
Seithipunal Tamil June 28, 2025 11:48 AM

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஜூலை 2 முதல் 5 வரை 08 நாட்கள் வெளிநாடுகளுக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கவும், உலகின் தெற்கு பகுதியில் உள்ள நாடுகளுடன் உறவை மேம்படுத்தவும்,இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்லும் பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து கானா, ட்ரினிடாட் மற்றும் டுபாக்கோ, அர்ஜென்டினா, நமீபியா நாடுகளுக்கு செல்லவுள்ளார்.

ஜூலை 02 முதல் 03 வரை முதலாவதாக கானாவில் சுற்று பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி முதல்முறையாக இந்த நாட்டிற்கு செல்கிறார். கடந்த 03 தசாப்தங்களில் கானா நாட்டிற்கு செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமையையும் மோடி இதன் மூலம் பெறுகிறார். அங்கு அந்நாட்டு அதிபரை சந்தித்து, இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கும் மோடி, பொருளாதாரம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கவுள்ளார்.

02 நாள் பயணமாக ட்ரினிடாட் மற்றும் டுபாக்கோவுக்கு செல்லும் மோடி அந்நாட்டு அதிபர் கிறிஸ்டைன் கர்லா மற்றும் பிரதமர் கமலா பிரசாத் ஆகியோரை சந்திக்கவுள்ளார். அந்நாட்டு பார்லிமென்டின் கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். 1999-ஆம் ஆண்டுக்கு பிறகு அங்கு செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெறவுள்ளார்.

அடுத்து, 03-வது நாடாக அர்ஜென்டினாவுக்கு ஜூலை 04 மற்றும் 05 ஆகிய தேதிகளில் மோடி சுற்றுபயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் ஜாவியர் மிலாயை சந்தித்து, பாதுகாப்பு, விவசாயம், சுரங்கம், எண்ணெய் மற்றும் காஸ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவை குறித்து ஆலோசிக்கவுள்ளார்.

இதனை தொடர்ந்து, பிரேசில் அதிர் லூயிஸ் இனாசியோ லூலா சில்வா அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு செல்லும் மோடி அங்கு அங்கு 05 முதல் 08-ஆம் தேதி வரை தங்கவுள்ளார். அத்துடன், அந்நாட்டு அதிபருடன் வர்த்தகம், பாதுகாப்பு, எரி்சக்தி, விண்வெளி, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் சுகாதாரம் குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார்.

அடுத்ததாக, பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கும் மோடி, சர்வதேச அமைப்புகளின் சீர்திருத்தம், அமைதி, பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், பொருளாதார பிரச்னைகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கவுள்ளார். இந்த மாநாட்டிற்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார்.
சந்திக்கிறார்.

இறுதியில் நமீபியா செல்லும் பிரதமர் அந்நாட்டு அதிபருடன் இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கவுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தோடு பிரதமர் மோடி 03-வது முறையாக நமீபியா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.