ஜூலை மாத விசேஷ நாட்கள்...திருப்பதி தேவஸ்தானம் வெளியீடு!
Dinamaalai July 01, 2025 01:48 AM

 

ஜூலை  மாத திருப்பதி விசேஷ நாட்கள் வெளியிடப்பட்டுள்ளன. 10வது மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி, மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் திருமலையில் வரும் ஜூலை மாத விசேஷ தினங்கள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இது குறித்து திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 5ம் தேதி பெரியாழ்வார் சாற்றுமுறை, 7ம் தேதி ஸ்ரீ நாதமுனி திருநட்சத்திரம், 10ம் தேதி குரு பவுர்ணமி மற்றும் திருமலை கருடசேவை, 16ம் தேதி ஆனிவார ஆஸ்தானம், 25ம் தேதி சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரம், 28ம் தேதி புரசைவாரி தோட்டம் நிகழ்ச்சி, 29ம் தேதி கருட பஞ்சமி மற்றும் கருட சேவை, 30ம் தேதி கல்கி மற்றும் காஷ்யப்ப ஜெயந்தி கடைப்பிடிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.