திக் திக் நிமிடங்கள்….! அதிவேகமாக வந்த கார்…. சக்கரத்தில் சிக்கி துடித்து இறந்த பெண்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!
SeithiSolai Tamil July 01, 2025 06:48 AM

உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கியில், சாலையில் நடந்து சென்ற இளம் பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் முழு வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் ரூர்க்கி நகரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல் நிலையம் பகுதியில் நடைபெற்றது.

பணி நிமித்தமாக அலுவலகத்திற்குச் சென்ற இளம்பெண், மழையில் குடையுடன் சாலையை கடந்தபோது திடீரென ஒரு கார் மோதியது. கார் முதலில் சில விநாடிகள் நின்ற நிலையில், பின்னர் திடீரென வேகத்தை அதிகரித்து நேரடியாக பெண்ணை மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சிசிடிவி வீடியோவில் பெண் சாலையில் அமைதியாக நடந்து செல்வது, பின்னர் கார் மோதும் அதிர்ச்சியான காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது பலரையும் கவலையடையச் செய்துள்ளது.

தகவல் கிடைத்ததும், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். கார் ஓட்டுநர் சம்பவத்துக்குப் பிறகு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. போலீசார் சம்பந்தப்பட்ட வாகனத்தை கைப்பற்றியுள்ளனர். தற்போது ஓட்டுநரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.