“இந்த முடிவு எனக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியும் அளிக்கிறது”….மேலிட முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்த பாஜக எம்எல்ஏ… சூடு பிடிக்கும் அரசியல் களம்..!!!
SeithiSolai Tamil July 01, 2025 02:48 AM

தெலுங்கானா மாநில தலைவராக உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரான என். ராமச்சந்திர ராவ் நியமிக்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா எம்.எல்.ஏ டி. ராஜா சிங் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் தனது ராஜினாமா கடிதத்தை மத்திய அமைச்சர் மற்றும் தற்போதைய தலைவர் ஜி. கிஷன் ரெட்டிக்கு அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், “ராமச்சந்திரா தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன. அந்த முடிவு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

இச்செய்தி எனக்கு மட்டுமல்ல என்னைப் போன்று கட்சியில் எந்த சூழ்நிலையிலும் விட்டுப் போகாமல் நின்ற இலட்சக்கணக்கான தொண்டர்கள், தலைவர்கள், வாக்காளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தெலுங்கானாவில் பாஜக தனது முதல் அரசாங்கத்தை அமைக்கும் நிலையில் நின்று கொண்டு இது போன்ற செயலை செய்வது மிகவும் கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது.

மேலும் நாம் செல்லும் திசை குறித்து கேள்வி எழுப்புகிறது. அந்தப் பதவிக்கு பொருத்தமான ஏராளமான தலைவர்கள் இங்கு உள்ளனர்”என குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.