தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டியில் உள்ள பாஷமயிலரம் என்ற பகுதியில் தனியார் ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நேற்று திடீரென தீ விபத்தை ஏற்பட்டது. அதாவது பாய்லர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 33 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளன.
இந்நிலையில் பலி எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மருத்துவமனையில் 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது. நேற்று மாலை பணியில் இருந்த தொழிலாளர்கள் சிலர் சுமார் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டனர்.