“மாடுகள் இல்லாததால் நாங்களே மாடுகள் ஆனோம்… 75-வயது விவசாயி, மனைவி உழவனாக நின்ற கண்ணீர் வீடியோ!”
SeithiSolai Tamil July 02, 2025 12:48 AM

மகாராஷ்டிரா மாநிலத்தின் லாத்தூர் மாவட்டம் ஹாடோல்தி கிராமத்தில் இருந்து மனதை பதறவைக்கும் சோகமான ஒரு காட்சி வெளியாகியுள்ளது. வயதான விவசாய தம்பதியர் ஒருவர், மாடுகள் கிடைக்கவில்லையென்ற காரணத்தால் தாங்களேமாடுகளாக மாறி, விளை நிலத்தில் உழுது விதைத்திருக்கிறார்கள்.

75 வயதான அம்பதாஸ் பவார் என்பவர், தனது மனைவி முக்தாபாய் பவாருடன் சேர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மாடுகள் இல்லாத நிலையில் தாங்களே உழுது விளைச்சலை வளர்க்க முயற்சித்து வருகின்றனர். இந்த ஆண்டு, தொழிலாளர்கள் கிடைக்கவில்லை, டிராக்டர் வாடகைக்கு செலவிட இயலவில்லை – எனவே, விவசாயம் வேண்டுமென்றால் தாங்களே உழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற போது, அம்பதாஸ் பவார் தாங்களே கம்பி கட்டப்பட்ட கயிற்றில் மாடுகளாகப் பட்டியடிக்க, பின்னால் அவரது மனைவி உழவை இயக்கும் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இது, கிராமம் மட்டுமின்றி, மொத்த மகாராஷ்டிராவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“>

 

அம்பதாஸ் பவார் கூறுகையில், “மழை அதிகமாக பெய்ததால், கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் பெரும் நட்டத்தைச் சந்தித்தோம். கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேறு வழியின்றி நாங்கள் எங்களையே உழவுக்கு தயாராக்கிக் கொண்டோம். அரசு எங்களுடைய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே வேண்டுகோள். இல்லை என்றால் வாழவே முடியாது.”

ஆன்மநம்பிக்கையை வலியுறுத்தும் அரசு, உழைக்கும் விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகளை கூட வழங்க முடியாத நிலையில் இருப்பது இந்த ஒரு காட்சியில் முழுமையாக வெளிப்படுகிறது. மாடுகள் இல்லாத காரணத்தால் தம் உடலை உழவுக்கு அர்ப்பணிக்க வேண்டிய நிலை விவசாயத்தில் இருக்கும் வறுமை, கண்ணீரின் ஒரு பகுதி மட்டுமே.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.