இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில், ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 4 வது இடத்திலிருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஸ்மிருதி மந்தனா, சர்வதேச டி20 போட்டிகளில் அவரது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அந்த போட்டியில் அவர் 62 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
ஆஸ்திரேலிய அணியின் பெத் மூனி 794 ரேட்டிங் புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்திலும், மேற்கிந்தியத் தீவுகள் வீராங்கனை ஹேலி மேத்யூஸ் 771 ரேட்டிங் புள்ளிகளுடன் 2 வது இடத்திலும் உள்ளனர். ஸ்மிருதி மந்தனா 771 ரேட்டிங் புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் ஷஃபாலி வர்மாவும் பேட்டிங் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். அவர் 14வது இடத்திலிருந்து 13-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். படுகாயம் காரணமாக இங்கிலாந்து எதிரான டி20 தொடரில் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் இடம்பெறாத நிலையில், அணியை ஸ்மிருதி மந்தனா கேப்டனாக வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?