தெலங்கானா மாநிலத்தில் சங்காரெட்டி மாவட்டத்தில், ரசாயன ஆலையின் வெடிவிபத்தில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.சங்காரெட்டி மாவட்டத்திலுள்ள, பாஷாமைலாரம் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வந்த சிகாச்சி மருந்து ஆலையில், நேற்று ஜூன் 30ம் தேதி உலை வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
விபத்து ஏற்பட்ட இடத்தை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இன்று ஜூலை 1ம் தேதி நேரில் பார்வையிட்டார். அப்போது, செய்தியாளர்களுடன் பேசிய அவர், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் இழப்பீட்டு தொகையாக வழங்கப்படும் எனக் கூறினார்."பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க மாநில அரசு, மருந்து ஆலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தும். அரசு மற்றும் நிறுவனத் தரப்பிலிருந்து ரூ.1 கோடி இழப்பீடு வழங்க நான் உத்தரவு பிறப்பித்துள்ளேன்" என கூறியுள்ளார்.
பலியானவர்களின் குடும்பங்களின் உடனடி தேவைகளுக்காக மாநில அரசு சார்பில் ரூ. 1 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50000மும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.முன்னதாக, விபத்தில் பலியான தொழிலாளர்களில் பெரும்பாலானோர், ஒடிசா, பிகார், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது