குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் ஒரு ஆன்லைன் வழக்கு விசாரணையின் போது ஒருவர் கழிவறையில் இருந்து விசாரணைக்கு ஆஜரான சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது குறித்த வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலானது. இந்நிலையில் தற்போது மீண்டும் குஜராத் மாநிலத்தில் உயர்நீதிமன்றம் ஆன்லைன் வழியாக ஒரு வழக்கை விசாரித்த போது சர்ச்சையான சம்பவம் நடந்துள்ளது.
அதாவது மூத்த வழக்கறிஞரான பாஸ்கர் தன்னா என்பவர் ஆன்லைன் வழியாக வழக்கு விசாரணைக்கு ஆஜரானபோது ஒரு டம்ளரில் பீர் குடித்தார். அவர் ஒரு கையில் செல்போனை வைத்து பேசியே நிலையில் மற்றொரு கையில் பீரை குடித்தது நீதிபதிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விரைவில் வழக்கு விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.