உத்திரபிரதேச மாநிலம் நவப்கஞ்ச் பகுதியில் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 11 ம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவி சம்பவ நாளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த போலீஸ் கான்ஸ்டபிள் வினய் சவுகான் அந்த மாணவியை தனது காரில் கடத்திச் சென்றுள்ளார்.
அதன் பின் மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மாலை நேரத்தில் மாணவி வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த மாணவியின் தந்தை உறவினர்களுடன் தனது மகளை தேடி சென்றார். அப்போது தனது மகளை கான்ஸ்டபிள் வினயின் காரில் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தனது மகளை மீட்டு கான்ஸ்டபிள் வினயை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அவர் மீது புகார் கொடுத்த நிலையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வினயை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் மாணவிக்கு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.