நாட்டையே உலுக்கிய வரதட்சணை வழக்கு… மருத்துவ மாணவி விஸ்மயா கணவருக்கு ஜாமின்… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
SeithiSolai Tamil July 04, 2025 01:48 PM

கேரளா மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவ மாணவி வித்யா விஸ்மயா வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு கிரன்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் வரதட்சணையாக ஒரு ஏக்கர் நிலம், 100 பவுன் நகை, ரொக்கம் என வழங்கப்பட்டது. இருப்பினும் கணவன் வரதட்சணை கேட்டு அப்பெண்ணை துன்புறுத்தியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து கிரண் மீது விஸ்மையா குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்தனர்.

இந்த விசாரணையின் போது நீதிமன்றம் கிரன்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து கிரண் குமார் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தற்போது மீண்டும் அவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் கிரண் குமாருக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.