டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காற்று மாசடைவதைக் கட்டுப்படுத்த, 10 வருடங்களுக்கும் மேலான பழைய வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த நடைமுறைக்கு வாகன ஓட்டிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்ததால், தளர்வுகளை கொண்டுவர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன..
ஜூலை 1 முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களும் எந்த எரிபொருள் நிலையத்திலும் எரிபொருள் நிரப்ப அனுமதிக்கப்படாது என கடுமையான நடைமுறை அமல்படுத்தப்பட்டது. மேலும், எரிபொருள் நிரப்பவரும் பழைய வாகனங்கள் காவல் துறையினரால் பறிமுதலும் செய்யப்பட்டன. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், பல்வேறு சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்ப சவால்கள் காரணமாக இந்த வாகனங்களுக்கு உடனடியாகத் தடைவிதிக்க முடியாது என காற்று தர மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, "இந்த நடவடிக்கையால் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் அவர்களுடன் துணை நிற்கிறது" எனக் கூறியிருந்தார்.
தலைநகரில் மட்டும் மொத்தம் 60.14 லட்சம் பதிவு நீக்கம் செய்யப்பட்ட 10 முதல் 15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் உள்ளன. அவற்றில் கணிசமான எண்ணிக்கையிலான வாகனங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. 41 லட்சம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 18 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 62 லட்சத்திற்கும் மேற்பட்ட பழைய வாகனங்கள் இருப்பதாகவும் வாகன் தரவுத்தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?