மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் விவசாயிகள் தற்கொலை புள்ளி விவரங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் மகரந்த் பாட்டீல் இந்த அதிர்ச்சி தகவலை கூறினார். இந்த வழக்கில் 373 குடும்பங்கள் நிதி இழப்பீடு பெற தகுதியானவர்கள்.
ஆனால் அரசாங்கம் அவர்களில் 200 குடும்பங்களை தகுதியற்றவர்கள் என்று அறிவித்தது. 194 வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். தகுதியுள்ள 327 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவார நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள வழக்குகளில் இழப்பீடு வழங்குவதையும் முடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதக்கிடையில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவியை அதிகரிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூறினர். முன்னதாக கடந்த 2024 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் 2635 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அதேபோன்று கடந்த 2023 ஆம் ஆண்டில் 2851 ஆக இருந்தது. கடந்த 2001 முதல் மகாராஷ்டிராவில் 39,825 பேர் தற்கொலை செய்து கொண்டதாக பதிவாகியுள்ளது.