1.ஆடைகள் : உங்களுடைய கல்லூரியில் சீருடை இருந்தால் நல்லது. முறையாக துவைத்து உடுத்துங்கள். ஒருவேளை சீருடை இல்லாதபட்சத்தில் ஆடையை தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள். உங்களுடைய ஆளுமையை வெளிப்படுத்தக்கூடிய சிறந்த ஆடைகளை தேர்வு செய்யுங்கள். உங்களுடைய ஆடையைப் பொறுத்து மாணவர்களும், பேராசிரியர்களும் உங்களை மதிப்பிடக்கூடும். நல்ல ஆடைகள் நல்ல தோற்றத்தையும் தன்னம்பிக்கையும் வழங்கும்.
2. பயத்தை ஒழியுங்கள்: இப்போது எல்லா கல்லூரிகளிலும் ராகிங் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் ராகிங் குறித்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. சின்னச் சின்ன ராகிங்களை நீங்கல் எதிர்கொள்ள வேண்டியிருந்தால் வெளிப்படையாக பேசி எதிர்க்கவும். அதேசமயம் யாருடைய சுயமரியாதையும் புண்படுத்தாமல் கவனமாகப் பேசுங்கள்.
3. நம்பிக்கையோடு செல்லுங்கள்: கல்லூரியில் முதல் நாள் என்றால் உங்கள் நம்பிக்கையை வலுவாக வைத்திருக்கவும். இது நம்பிக்கையோடு உங்களை தைரியமாக நடமாட வைக்கும். நல்ல நட்பை உருவாக்கும்.
4. நட்புடன் இருங்கள்: கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் அனைவரிடமும் பேச முயற்சி செய்யுங்கள். அதனால் நீங்கள் உங்கள் நண்பர்களை எளிமையாக கண்டுபிடித்து நட்பாக இருந்து. அவர்களின் உதவியுடன் நீங்கள் நல்ல நண்பர்களை உருவாக்க முடியும். அதனால்தான் முதல் நாளிலிருந்தே அனைவரிடமும் பேசி உங்களோடு நட்பு கொள்வதும் மிகவும் முக்கியம்.
5. நேரம் ஒதுக்குங்கள்: உங்கள் நண்பர்களிடம் நீங்கள் நிறைய கற்றுக் கொள்ளலாம். கல்லூரியில் படிக்க இருக்கும் வகுப்பறையையும் நிதானமாகத் தேடி கண்டுபிடிக்க முடியும். இதனால் கல்லூரிக்கு நேரத்தோடு சென்று விடுங்கள். கல்லூரி வகுப்புகளைத் தவற விடாதீர்கள்.
6. உதவி கேளுங்கள்: முதல் நாள் வகுப்பில் ஏதாவது புரியவில்லை என்றால் பயமின்றி, பேராசிரியரிடம் கேள்விகளைக் கேட்கலாம். கேள்வி கேட்பது தீர்வுகளை கண்டறியும். உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கவும் உதவும்.
7.பேசும்போது ஜாக்கிரதை : நீங்கள் பள்ளியில் பயிலும்போது பேசிய விதமும், கல்லூரியில் பேசும் விதமும் ஒன்றல்ல. உங்களுடைய மொழியில் கவனமாக இருக்க வேண்டும். பிறர் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக உங்களுடைய மதம், ஜாதி போன்ற விஷயங்களில் பெருமை கொள்வதையும், அது குறித்து சண்டையிடுவதையும் தவிருங்கள். எல்லாரையும் சமமாக கருத வேண்டும்.