17 நாட்கள் 30 ஸ்தலங்கள் .... ஐஆர்சிடிசியின் அசத்தல் ஸ்ரீராமாயண சுற்றுலா!
Dinamaalai July 05, 2025 05:48 PM

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு தினமும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு 5வது சிறப்பு ராமாயண ரயில் சுற்றுலாவை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.  ஸ்ரீராமாயண யாத்திரை எனப் பெயர் சூட்டப்பட்டு இருக்கும் இந்த சுற்றுலா, ஜூலை 25ம் தேதி தொடங்குகிறது. அயோத்தியில் தொடங்கி, ஸ்ரீராமருடன் தொடர்புடைய நந்திகிராம், ஜனகபுரி, வாராணசி, பிரயாக்ராஜ், ஹம்பி என இறுதியாக ராமேஸ்வரத்தில் சுற்றுலா நிறைவு பெறுகிறது. மீண்டும் சுற்றுலா பயணிகள் டெல்லியில் கொண்டு வந்து இறக்கிவிடப்படுவார்கள் எனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமாயணத்துடன் தொடர்புடைய சுமார் 30 தலங்களை 17 நாள்கள் செல்லும் இந்த சுற்றுலா திட்டத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் வசதி கிடைக்கும். இதற்கு ஒருவருக்கு கட்டணமாக 3 டயர் ஏசி ரயில் பெட்டியாக இருப்பின் ரூ.1.17 லட்சம் வசூலிக்கப்படுகிறது. 2 டயர் ஏசி பெட்டியாக இருந்தால் ரூ.1.40 லட்சமாகவும், ஒரு டயர் ஏசி பெட்டிக்கு ரூ.1.66 லட்சமாகவும், 1 ஏசி பெட்டியில் தனியாக பயணிக்க ரூ.1.79 லட்சமாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

17 நாட்கள் இந்த சுற்றுப்பயணம் அடங்கும். இந்த கட்டணத்தில், போக்குவரத்து, தங்குமிடங்கள், சைவ உணவு மட்டும், பயணக் காப்பீடு என அனைத்தும் அடங்கும்.ஜூலை 25ம் தேதி தில்லி சஃப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து தொடங்குகிறது. இதற்காக பாரத் கௌரவ் டீலக்ஸ் ஏசி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சுற்றுலா பயணிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பதால் மிகச் சிறந்த அனுபவம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.