முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி... தொண்டர்கள் அதிர்ச்சி!
Dinamaalai July 05, 2025 02:48 PM

உடல்நலக் குறைவு காரணமாக தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகன் கே.டி. ராமராவ் தெரிவித்துள்ளார்.

உயர் இரத்த சர்க்கரை மற்றும் சோடியம் அளவு குறைவு காரணமாக தெலங்கானா முன்னாள் முதல்வரும் பி.ஆர்.எஸ் தலைவருமான கே.சந்திரசேகரராவ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவர் வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன ஆனால், அவரது உடல்நிலை சீராக உள்ளதாக  மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இந்நிலையில்  கே.சி.ஆரின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, விரைவில் அவர் குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மேலும் மத்திய அமைச்சர்கள் ஜி. கிஷன் ரெட்டி, பண்டி சஞ்சய் குமார் மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி ஆகியோரும்  சந்திரசேகர் ராவ் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.