“திருமணமான பெண்கள் மாமனார் மாமியாரை மதிக்க கற்றுக் கொள்ளணும்”… சௌமியா அன்புமணி அறிவுரை..!!!
SeithiSolai Tamil July 07, 2025 05:48 AM

கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பகுதியில் பாமக பிரமுகர் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சௌமியா அன்புமணி கலந்து கொண்ட நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் மணமக்களை வாழ்த்திய சௌமியா அன்புமணி அங்கிருந்தவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, திருமணமான பிறகு மணப்பெண்கள் மாமனார் மாமியாரை மதிப்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். பெற்றோர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்று கூறினார். பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு என்பது நிலவும் நிலையில் தன்னுடைய மகன் அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தி வருகிறார். இது பற்றி அன்புமணி கூறும் போது ராமதாஸ் குழந்தையாக மாறிவிட்டார். அவர் உண்மையிலேயே ராமதாஸாக இருந்தால் மகனையும் மருமகளையும் இப்படி குறை சொல்வாரா என்று கூறினார். மேலும் இந்த நிலையில் மாமனார் மாமியாரை மதிக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.