அமெரிக்க தொழிலதிபர் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், புதிய அரசியல் கட்சி ஒன்றை “அமெரிக்கா பார்ட்டி” என பெயரிட்டு துவங்கியுள்ளார்.
அதிபர் டொனால்டு டிரம்ப் உடனான கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கட்சியின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான பொருளாளராகவும், ஆவணங்கள் பாதுகாவலராகவும் இந்திய வம்சாவளியையுடைய வைபவ் தனேஜா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது முக்கிய அம்சமாகும்.
டில்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்ற வைபவ் தனேஜா, தற்போது டெஸ்லா நிறுவனத்தின் நிதித் துறை தலைவராக பணியாற்றி வருகிறார். பட்டயக் கணக்காளராக பெற்ற இவரது நிதி மேலாண்மை திறமையே அமெரிக்கா கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படக் காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நியமனம், உலக அரசியல் அரங்கில் இந்திய வம்சாவளியரின் தாக்கத்தை மேலும் வலுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.