மத்தியப்பிரதேசம் ரேவா நகரில் வசித்து வருபவர் 65 வயது சரோஜ் துபே. பள்ளி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவருக்கு கடந்த ஜூலை 1ம் தேதி அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
பழங்கால நாணய நிறுவனத்தின் பிரதிநிதி என்று கூறிக் கொண்டு, அலங்கார மற்றும் பாரம்பரிய நோக்கங்களுக்காக அரசு பழங்கால நாணயங்களை வாங்குவதாகவும் அதற்கு பணம் கொடுப்பதாகவும் கூறினர்.
இதனை நம்பி தான் வைத்துள்ள பழங்கால நாணயங்களின் படங்களை சைபர் மோசடி நபருக்கு துபே அனுப்பி விட்டார். இதற்காக ரூ.66.75 லட்சம் வழங்குவதாகவும் செயலாக்க கட்டணமாக ரூ.520 செலுத்தும்படி கூறி உள்ளனர். இதனை நம்பி துபே பணம் செலுத்தியதும் அந்த மோசடி கும்பல் பரிசு பணம் நிரம்பிய பைகளின் வீடியோ, சான்றிதழ் ஆகியவற்றை துபேயின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பியுள்ளது. இதனால் சந்தோஷம் அடைந்த துபேயிடம் வரி மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த மேலும் பணம் வேண்டும் என மோசடி கும்பல் கூறியது. இதையடுத்து உறவினர், நண்பர் என பலரிடம் கடன் வாங்கி ஆறு பரிவர்த்தனைகள் மூலமாக ரூ.37,000 அனுப்பி வைத்தார்.
அத்துடன் டெபாசிட் தொகை ரூ.10,000 செலுத்த கோரிய போது தான் அவரது மனைவி நிர்மலாவுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. அவர் ஏமாற்றப்பட்டதை குடும்பத்தினர் துபேயிடம் தெரிவித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த துபே தனது தந்தை உரிமம் வாங்கி வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காவல் துறை கண்காணிப்பாளர் “சைபர் மோசடி மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பழங்கால நாணயங்களுக்கு ஈடாக கோடிக்கணக்கில் பணம் தருவதாக கூறி மோசடி செய்யப்பட்டுள்ளது. இது போன்ற சைபர் மோசடி கும்பல்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம் செலுத்திய வங்கி கணக்குகள் மற்றும் ஐபி முகவரிகளைக் கொண்டு தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?