சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள ஓடைமறிச்சான் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குட்டி (67). இவர் கடந்த 2018-ம் ஆண்டு 9 வயது சிறுமியான 4-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் முக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, முத்துக்குட்டியை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட முத்துக்குட்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உஷா ஆஜரானார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?