பெரும் சோகம்... கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து….3 பேர் பலி, 10 மாணவர்கள் படுகாயம்!
Dinamaalai July 08, 2025 02:48 PM

கடலூர்  மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில்  ஆச்சாரியா பள்ளியில்  வேன் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து இன்று ஜூலை 8ம் தேதி  காலை செம்மங்குப்பம் அருகேயுள்ள ஆளில்லா ரயில்வே கேட் பகுதியில் நடந்தது. பள்ளிவேன், ஆளில்லா கேட்டைக் கடக்க முயற்சித்தபோது  வேகமாக வந்த ரயில் மோதியதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.  


இந்த விபத்தில் பள்ளி வாகனம் முற்றிலும் நொறுங்கியதாகவும், இதில் பயணித்த மாணவர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்த மாணவரின் அடையாளம் உடனடியாக வெளியிடப்படவில்லை. ஆனால் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படுகாயம் அடைந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக மீட்புக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து, மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விபத்து, ஆளில்லா ரயில்வே கேட் பகுதிகளில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் ஆபத்துகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.  
இந்த விபத்து குறித்து ரயில்வே துறையும், காவல்துறையும் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த துயர சம்பவம், செம்மங்குப்பம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.