“பாம்புகளின் நண்பன்”… அதே பாம்பால் வந்த மரணம்… வெளியான வீடியோ.. முதலில் 2000 பாம்புகளை மீட்டவர், இப்போ… அடுத்தடுத்த மரணங்களால் சோகத்தில் மக்கள்..!!!
SeithiSolai Tamil July 08, 2025 03:48 PM

பீகார் மாநிலம் வைசாலியைச் சேர்ந்த ‘பாம்பு மித்ரா’ என அழைக்கப்பட்ட ஜே.பி. யாதவ், பாம்பு கடியால் உயிரிழந்த சோக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, வைசாலி மாவட்டம் ராஜபக்கர் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பகுதியில் பெரிய நாகம் ஒன்று வெளியே வந்ததாக தகவல் பரவியதும், பாம்புகளை மீட்டுத் தருவதில் சிறப்புப் பங்கு வகிக்கும் யாதவ் அழைக்கப்பட்டார்.

பாம்பை கட்டுப்படுத்த முயன்றபோது அவரை சுற்றி மக்கள் கூட்டமாக திரண்டனர். அந்த வேளையில், நாகம் யாதவ் விரலை கடித்தது. அந்த கடியை பொருட்படுத்தாமல் பாம்பை பிடித்து பெட்டியில் போட முயற்சித்த ஜே.பி. யாதவ், சில நிமிடங்களிலேயே விஷத்தின் தாக்கத்தால் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சன்றும் , சிகிச்சைக்கு முன்பே அவர் உயிரிழந்தார்.

இதற்கு முந்தைய சம்பவத்தில், சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ‘பாம்பு மனிதன்’ ஜெய் சாஹ்னியும், பாம்பு கடியால் உயிரிழந்திருந்தார். சுமார் 2,000க்கும் மேற்பட்ட பாம்புகளின் உயிரை காப்பாற்றிய இவர், பாம்புகளை தனது நண்பர்களாகவே கருதி பராமரித்து வந்தவர். ஆனால் மீட்புப் பணியில் ஈடுபட்டபோது அவர் ஒரு பாம்பினால் கடிக்கப்பட்டு, சிகிச்சையின் போது உயிரிழந்தார். பாம்புகளின் பாதுகாப்புக்காக வாழ்ந்த இருவரின் மரணமும் பீகாரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.