மீண்டும் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் பிருத்விஷா... எந்த அணிக்காக தெரியுமா..?
SeithiSolai Tamil July 08, 2025 04:48 PM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரித்விஷா. இவர் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களின் இந்திய அணிக்காக கேப்டனாக செயல்பட்ட நிலையில் உலக கோப்பையை வென்றார். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான இவர் அதிக அளவிலான போட்டிகளில் ரன்களை குவித்துள்ளார். இந்நிலையில் உடல் ஆரோக்கியம், ஒழுங்கீன பிரச்சனைகளில் ஈடுபட்டதால் இந்திய அணியில் இருந்து தவிர்க்கப்பட்டார்.

தற்போது மும்பை அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இதைத் தொடர்ந்து மும்பை அணியிலிருந்து வெளியேற முடிவு செய்த பிரித்விஷா தடையில்லா சான்றிதழ் வழங்க கோரிக்கை விடுத்தார். அதன்படி மும்பை கிரிக்கெட் சங்கம் அவருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது.

பின்னர் 2025 – 2026 ஆம் ஆண்டு உள்ளூர் சீசனில் மராட்டிய மாநில அணிக்காக விளையாடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் மும்பை அணியில் இருந்து மராட்டிய மாநில அணியுடன் பிரித்விஷா இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.