நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் குபேரா (Kuberaa Movie). இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இவரை நடிக்காத பிச்சைகாரர் வேடத்தில் நடித்து இருந்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. மேலும் இந்தப் கதாப்பாத்திரத்திற்காக நடிகர் தனுஷ் குப்பை கிடங்குகளில் படுத்து இருந்தது எல்லாம் படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக படக்குழு தெரிவித்தது வைரலானது குறிப்பிடத்தக்கது. ஒரு நடிகர் தனது படத்திற்காக எவ்வளவு மெனக்கெடல்களை செய்கிறார் என்பது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த பெருமை அளிக்கும் விசயமாகவே இருக்கும். அப்படி தொடர்ந்து தனது ரசிகர்களை பல இடங்களில் பெருமையடையச் செய்கிறார் நடிகர் தனுஷ். திரையரங்குகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்த குபேரா படம் இன்னும் சில நாட்களில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் இட்லி கடை. இந்தப் படத்தை நடிகர் தனுஷே இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தனுஷ் இயக்கத்தில் வெளியாகும் 4-வது படம் ஆகும். இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.
நடிகர் தனுஷின் எக்ஸ் தள பதிவு:Idli kadai #oct1 pic.twitter.com/9EkllemSPt
— Dhanush (@dhanushkraja)
Also read… சசிகுமாரின் ஃப்ரீடம் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்ட்
தனுஷின் அடுத்தப் படத்தில் நாயகியாகும் மமிதா பைஜூ!இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது 53-வது படத்தை இந்தி இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனது 54-வது படத்திற்காக இயக்குநர் விக்னேஷ் ராஜா உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
Also read… ஓஹோ எந்தன் பேபி படத்தைப் பார்த்து பாராட்டிய அமீர் கான் – விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி
இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த வாரம் பூஜையுடன் தொடங்கும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.