நாளை பொது வேலைநிறுத்தம்... தமிழகத்தில் No Work, No Pay முறையில் சம்பளம் பிடித்தம்!
Dinamaalai July 09, 2025 01:48 AM


இந்தியா முழுவதும் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. இதற்கு, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் இயங்குமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர்  சிவசங்கர்  மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள பொது வேலைநிறுத்தத்திற்கு, தமிழ்நாட்டில் உள்ள திமுக-வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்ட் சட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யு.சி., மதிமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ்  கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட மொத்தம் 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் நாளை பேருந்துகள் இயங்குமா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்தது. இதையடுத்து, தமிழகத்தில் நாளை வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டால், அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், முழுமையான அளவில் பேருந்துகளை இயக்க, போக்குவரத்துத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.  
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்தப்பட உள்ள 4 சட்டத் தொகுப்புகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பது உட்பட  17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் இந்த போராட்டம் நடத்துகின்றன.


மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள பொது வேலைநிறுத்தத்திற்கு, தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்கள் உட்பட  13 தொழிற்சங்கங்கள் அதரவு தெரிவித்துள்ளன. இந்த பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும்  பங்கேற்பார்கள் என்று தகவல்கள் வெளியானது.
அதோடு, வங்கிகள் மற்றும் காப்பீட்டுத் துறையும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை வங்கிகள் விடுமுறை ஏதும் அறிவிக்கவில்லை. மேலும், அனைத்து துறைகளையும் சேர்ந்த லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இதனால், பல்வேறு சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலாளர்   “No Work, No Pay“ என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.