காரும், சரக்கு வேனும் மோதி 3 வயது சிறுமி உட்பட 4 பேர் பலி ... அதிர்ச்சி தகவல்!
Dinamaalai July 08, 2025 11:48 PM


 

சென்னை பெருங்களத்தூரில் வசித்து வருபவர் 57 வயது  குமார். இவரது மனைவி  ஜெயா . இவரது   மகள் மோனிஷா  மற்றும் ஸ்டாலின் (36), அவரது மனைவி துர்கா (32), சிறுமி நிவேனி சூரியா (3) ஆகியோருடன் ஆன்மீக சுற்றுலா கிளம்பி சென்றனர். காரில்  இன்று காலை கும்பகோணம் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு புறப்பட்டனர். கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில்   காரை ஸ்டாலின் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தஞ்சை அருகே உதாரமங்கலம் பகுதியில் நாற்றுக்களை ஏற்றிக் கொண்டு வயலில் இருந்து சரக்கு வேனை விக்னேஷ்  ஓட்டி வந்துள்ளார். அப்போது காரும் நாற்று ஏற்றி வந்த சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடந்ததை கண்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.  இந்த விபத்தில் ஜெயா சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
இதில் செல்லும் வழியில் சிறுமி நிவேனி சூர்யா, துர்கா, குமார் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மோனிஷா, ஸ்டாலின் மற்றும் சரக்கு வேன் டிரைவர் உதாரமங்கலத்தில் வசித்து வரும்  விக்னேஷ் ஆகியோர் படுகாயத்துடன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.