நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று ஆடு மாடுகள் மேய்க்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான ஆடு மாடுகள் கலந்து கொண்டது. முதல் முறையாக ஒரு பொதுக்கூட்டத்தில் மனிதர்கள் அல்லாமல் ஆடு மாடுகள் ஏராளமாக நின்றது ஆச்சரியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் சீமான் பேசியதாவது, நான் ஆடு மாடுகள் மற்றும் இயற்கை விவசாயம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறேன். இன்றைய காலகட்டத்தில் கிராமப்புறங்களில் ஆடு மாடுகள் வைப்பது என்பது அரிதாகிவிட்டது.
என்னிடம் மட்டும் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தீர்கள் என்றால் நான் ஆடு மாடு மேய்க்கும் வேலையை அரசு வேலையாக மாற்றிக் காட்டுவேன். அதோடு ஆடு மாடு மேய்ப்பது அவமானமாம் கிடையாது, வெகுமானம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, உங்களால் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க முடியவில்லை எங்களுக்கு ஓட்டுரிமை கொடுங்கள் நாங்களாவது நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கிறோம். இது தான் ஆடு மாடுகளின் கோரிக்கை என்று கூறினார்.