சினிமா மற்றும் தொலைக்காட்சி ரசிகர்களிடம் அழியாத இடம் பிடித்த நடிகர் கிங்காங், தனது மகளின் திருமணத்தை வண்ணமாக நடத்தியுள்ளார். தன் காமெடி வேடங்களில் நம்மை சிரிக்கவைத்த கிங்காங், தற்போது தனது குடும்ப நிகழ்வால் சமூக ஊடகங்களில் கலக்கி வருகிறார். கிங்காங் மற்றும் அவரது மனைவி கலா என்பவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இதில் மூத்த மகளான கீர்த்தனாவின் திருமண நிகழ்ச்சி இன்று காலை சென்னை பெசன்ட் நகர் ஆறுபடை வீறு முருகன் கோவிலில் நவீன் என்பவருடன் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கான அழைப்பிதழை கிங்காங் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் திரை பிரபலர்களிடம் நேரில் சென்று வழங்கினார்.
இந்த திருமண விழாவில் பல திரைத்துறை நட்சத்திரங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிலையில் திருமணத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் நடிகர் கிங்காங்கை தனது இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டே புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.