Siragadikka Aasai : மீனா, முத்துவை பிரிக்க பிளான் போடும் அருண்… சுயநலவாதினு சொன்னது சரியாதான் இருக்கு!
CineReporters Tamil July 11, 2025 05:48 PM

Siragadikka Aasai : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலான சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.

குடித்துவிட்டு வந்த முத்து புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு மீனா வர முத்து அவரிடம் சத்தம் போடுகிறார். மீனா அண்ணாமலையிடம் வந்து மன்னிப்பு கேட்கிறார். அவர் நீ இப்படி செய்வேனு நான் நினைக்கவே இல்ல என்கிறார்.

மீனா என்னிடம் சீதா ஒரு வார்த்தை சொன்னால், அப்பா இருந்திருந்தால் அவர் என் காதலை மறுத்திருக்க மாட்டார். அதனால் எனக்கும் மன வருத்தமாகிவிட்டது. அதை தொடர்ந்து தான் சீதாவிற்கு இந்த விஷயத்தை செய்தேன் என்கிறார்.

நீ இதை முத்துவிடம் மறைத்து இருக்க கூடாது என்கிறார். அன்னைக்கு ரிஜிஸ்டர் ஆபிஸில் மீனாவை பார்த்தேன், அந்த அருணையும் பார்த்தேன். அப்ப கூட இவ என்னிடம் உண்மையை சொல்லலை என்கிறார்.

விஜயாவும் அவன் உன்னை எவ்வளோ நம்புனான். நீ எதுக்கு அவனிடம் மறைச்ச என்கிறார். உடனே ஸ்ருதி என்ன ஆண்ட்டி நீங்க முத்துக்கு சப்போர்ட் செய்றீங்க என்கிறார். ரோகிணி, ஆண்ட்டி சொல்றதுல என்ன தப்பு இருக்கு. அவங்க சரியா தான் பேசுறாங்க. மீனா சொன்னது பொய் தானே என்கிறார்.

ஸ்ருதி, நீங்க உங்க அப்பா மலேசியாவில் இருக்கதா பொய் சொன்னீங்களே என பதிலடி கொடுக்கிறார். உடனே மனோஜ் நீங்களும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டதால சப்போர்ட் செய்றீங்க எனக் கூற ரவி, ஓடிப்போய் கல்யாணம் செஞ்சிக்கிறது தப்பு இல்ல.

கல்யாணத்து அன்னைக்கு பொண்ணை விட்டுட்டு காசை தூக்கிட்டு தான் ஓடக்கூடாது என்கிறார். ரவி மற்றும் மனோஜ் அடித்துக்கொள்ள போக அண்ணாமலை அவரை அடக்குகிறார். நீ முதல வெளியில போ என முத்து மீனாவை துரத்துகிறார்.

அண்ணாமலை என்னடா எனக் கேட்க போக சொல்லுப்பா என்கிறார். மீனாவும் மனம் உடைந்து அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். சீதாவுக்கு சாந்தி முகூர்த்தம் நடக்க அவரும் அருணும், பேசிக்கொண்டு இருக்கின்றனர். நீங்க அந்த முத்துவுக்கு ஓவர் சப்போர்ட் செய்றீங்க என்கிறார்.

அவர் எங்க குடும்பத்துக்கு நிறைய செஞ்சி இருக்காரு. இனிமே நானும் இந்த குடும்பத்துக்கு ஒரு ஆள் என்கிறார் அருண். ஆமாமா என சீதா கூற மொத உங்க அக்காக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சி கொடுக்கணும் என்கிறார் அருண். ஏன் எங்க அக்காக்கு என்ன குறை நல்லா தானே இருக்கா என்கிறார்.

அருண், இல்ல உங்க மாமாக்கு நிறைய கெட்ட பழக்கம் இருக்கு. அதை மாத்தணும் சொன்னேன் என்கிறார். பின்னர் அருண், மொதல அந்த முத்துவை இவங்க குடும்பத்தில் இருந்து தள்ளி வைக்கணும் என யோசிக்கிறார். பின்னர் சீதாவும், அருணும் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

பின்னர் மீனா வீட்டிற்கு வர மீனாவின் அம்மா, சத்யா என்ன நடந்துச்சு என்கிறார். நீ கவலைப்படாதேம்மா. நான் பாத்துக்கிறேன் என்கிறார் மீனா. உனக்கு ஏன் இந்த வேலை? இப்போ உன் வாழ்க்கையை கெடுத்துட்டு இருக்க என்கிறார். அவங்களுக்கு நீ கல்யாணம் செஞ்சி வச்சது தப்பு என இந்திரா கூற அவ முடிவு பண்ணிட்டாங்க. நான் இல்லனாலும் அந்த கல்யாணத்தை செஞ்சிருப்பாங்க என்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.