பெண்ணிடம் செயின் பறிப்பு... 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை!
Dinamaalai July 11, 2025 05:48 PM

 

தூத்துக்குடியில் பெண்ணிடம் செயின் பறித்த 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.கடந்த 2022 ஆம் ஆண்டு சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் தங்கச் செயினை பறித்துச் சென்ற வழக்கில் தூத்துக்குடி சத்யாநகர் பகுதியைச் சேர்ந்தவர்களான ஜெயகொடி மகன் வேல்மணி (40/25) மற்றும் சதாசிவம் மகன் பாரதிகுமார் (27/25) ஆகிய இருவரையும் சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-3ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி  விஜய் ராஜ்குமார்  இன்று குற்றவாளிகளான வேல்மணி மற்றும் பாரதிகுமார் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 500/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர்   சண்முகம், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட உதவி அரசு தரப்பு வழக்கறிஞர்  கண்ணன் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர்  முருகன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாராட்டினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.