பலூசிஸ்தானில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்.. 9 பேர் கொல்லப்பட்ட கொடூரம்..
Tv9 Tamil July 11, 2025 10:48 PM

பாகிஸ்தான், ஜூலை 11, 2025: பாகிஸ்தானின் பதற்றமான பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாபைச் சேர்ந்த ஒன்பது பயணிகளை பயணிகள் பேருந்துகளில் இருந்து இறக்கிவிட்டு, பலூச் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஜூலை 10, 2025 அன்று இரவு ஜோப் மாவட்டத்தின் சுர் – டக்காய் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்ததாக உதவி ஆணையர் ஜோப் நவீத் ஆலம் தெரிவித்துள்ளார். ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் பஞ்சாப் செல்லும் இரண்டு பேருந்துகளை நிறுத்தி, பயணிகளின் அடையாள அட்டைகளைச் சரிபார்த்து, ஒன்பது பயணிகளை இறக்கிவிட்டு சுட்டுக் கொன்றனர். ஒன்பது பேரும் பஞ்சாப் மாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

9 பேர் உயிரிழந்த சோகம்:

உயிரிழந்த 9 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரைத் தாக்குவதில் பெயர் பெற்ற தடைசெய்யப்பட்ட அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை முன்னணி (BLF), இந்தக் கொடூரமான கொலைகளுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் நெடுஞ்சாலையில் போக்குவரத்தை நிறுத்தி, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மிர் சர்பராஸ் புக்தி:

ஒன்பது பயணிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த பலுசிஸ்தான் முதலமைச்சர் மிர் சர்பராஸ் புக்தி, அடையாளத்தின் அடிப்படையில் அப்பாவிகளைக் கொல்வது “மன்னிக்க முடியாத குற்றம்” என்று கூறினார். இது தொடர்பான அவரது பதிவில், “ “பயங்கரவாதிகள் தாங்கள் மனிதர்கள் அல்ல, கோழைத்தனமான மிருகங்கள் என்பதை நிரூபித்துள்ளனர். பலூசிஸ்தான் மண்ணில் அப்பாவிகளின் இரத்தம் வீணாகாது.” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read: 20 முதல் 50 சதவீதம் வரை வரி.. 22 நாடுகளுக்கு கடிதம் அனுப்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி இந்த சம்பவத்தை கண்டித்து, பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை குறிவைத்து மிக மோசமான காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டியுள்ளதாகக் தெரிவித்துள்ளார். பலுசிஸ்தானில் பல்வேறு நெடுஞ்சாலைகளில் செல்லும் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்களையும் பயணிகள் பேருந்துகளையும் கிளர்ச்சியாளர்கள் குறிவைப்பது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த தாக்குதல்:

Bodies of 9 martyrs from last night’s Zhob Sari Dhaka tragedy sent from Rakni to their native towns.#EnemiesOfBalochistan pic.twitter.com/l9VXbYHTk5

— Balochistan Insight (@BalochInsight)


இதற்கிடையில், கிளர்ச்சியாளர்கள் குவெட்டா, லோரலை மற்றும் மஸ்துங்கில் மேலும் மூன்று பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர். ஆனால் பலுசிஸ்தான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்ட், பாதுகாப்புப் படையினர் இந்த தாக்குதல்களை முறியடித்ததாகக் குறிப்பிட்டுள்ளது. ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள பலுசிஸ்தான், நீண்டகாலமாக வன்முறை கிளர்ச்சியின் தாயகமாக உள்ளது.

Also Read: H-1B விசா கட்டணத்தை உயர்த்திய அமெரிக்கா.. இனி கூடுதலாக ரூ.21,000 செலுத்த வேண்டும்!

பலூச் கிளர்ச்சிக் குழுக்கள் பாதுகாப்புப் பணியாளர்கள், அரசாங்கத் திட்டங்கள் மற்றும் எண்ணெய் மற்றும் கனிம வளம் மிக்க இந்த மாகாணத்தில் 60 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) திட்டங்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல்களை நடத்துகின்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.