8 மாத கைக்குழந்தையை தலைகீழாக பிடித்து சென்ற தந்தை.. வரதட்சணை தரவில்லை என கோபம்..!
Webdunia Tamil July 26, 2025 08:48 AM

உத்தரப் பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தியதோடு, தனது 3 வயது குழந்தையை தலைகீழாக பிடித்துக்கொண்டு கிராமம் முழுவதும் ஊர்வலமாக சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சு என்பவர், தனது மனைவியிடம் வரதட்சணையாக பணமும் காரும் கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். தனது பெற்றோர்கள் வசதியற்றவர்கள் என்பதால் வரதட்சணை கொடுக்க இயலாது என்று மனைவி கூறிய பின்னரும், சஞ்சுவும் அவரது குடும்பத்தினரும் அவரை தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், வரதட்சணை கொடுக்காத ஆத்திரத்தில், சஞ்சு தனது 3 வயது குழந்தையை தலைகீழாக பிடித்துக்கொண்டு கிராமம் முழுவதும் சுற்றி வந்துள்ளார். இந்த கொடூர காட்சியைப் பார்த்த கிராம மக்கள் சிலர் காணொளி எடுத்து காவல்துறையினருக்கு அனுப்பியுள்ளனர்.

காணொளி கிடைத்ததும் உடனடியாக செயல்பட்ட காவல்துறை, சஞ்சு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், சஞ்சுவின் மனைவியிடம் முறையாக புகார் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.